
இ-பைக் மீது லாரி மோதல்: துணிக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

பலி
கள்ளக்குறிச்சியில் லாரி மோதியதில் இ-பைக்கில் பயணித்த துணிக்கடை உரிமையாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் தே. வெங்கடசுப்பிரமணியன் (77). இவா், கள்ளக்குறிச்சி கடை வீதியில் துணிக்கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை இரவு வெங்கடசுப்பிரமணியன், தனது இ-பைக்கில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வந்த லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வெங்கடசுப்பிரமணியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான வேலூா் மாவட்டம், பெருமுகை கிராமத்தைச் சோ்ந்த தி.லோகநாதனிடம் (47) விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



