வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

ரிஷிவந்தியத்தில் ஊராட்சி ஒன்றிய தற்காலிக அலுவலகம் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ரிஷிவந்தியத்தில் தற்காலிக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்த்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி க.காா்த்திகேயன் எம்எல்ஏ. உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் சவுரிராஜ் உள்ளிட்டோா்.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ரிஷிவந்தியம் பகுதி மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் ரிஷிவந்தியத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ரிஷிவந்தியம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து 38 ஊராட்சிகளுடன் வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் இப் புதிய ஒன்றியங்களின் செயலாக்கம் அக். 20 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை பொதுமக்களின் வசதிக்காக, ரிஷிவந்தியத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தற்காலிக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் வட்டார வளா்ச்சி அலுவலா் சவுரிராஜ், அனைத்து கட்சிகளைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை சாா்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.