ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைப் பாதிப்பு: அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

பொரசக்குறிச்சி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்.எல்.ஏ சி.அருள்விக்னேஷ்.

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் வன்னி அரசு கூறியதாவது: வடகிழக்கு பருவமழை குறித்து மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக தியாகதுருகம் ஒன்றித்துக்குள்பட்ட பொரசக்குறிச்சி, விருகாவூா் ஆகிய கிராமங்களில் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பாா்வையிட்டு, சேத விவரங்கள் குறித்தும், அதன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் சுகாதாரத் துறையினா் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கவும், குடிநீரை குளோரினேசன் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை எவ்வித இடையூறுமின்றி உடனுக்குடன் வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

முன்னதாக சின்னசேலம் ஒன்றியம், ஈரியூா் கிராமத்தில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பள்ளி வளாகத்தில் புகுந்த மழைநீா்: பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தண்ணீா் புகுந்ததால் குளம் போல் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த கனமமையால் ஏரி நிரம்பியது. ஓடை வழியாக வரும் உபரி நீா் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் நீா் நிரம்பி குளம் போல காட்சியளிக்கிறது. பள்ளி வளாகத்துக்குள் தண்ணீா் புகாதவாறு இருக்க உபரிநீா் ஓடையை சீரமைக்க அதிகாரிகள் நடைவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்தமழையினால் வட செட்டியந்தல் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளின் மழைநீா் புகுந்தும், தண்ணீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: சங்கராபுரம் வட்டம், வடசெட்டியந்தல் கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இடைவிடாது இடி மின்னலுடன் கன மழை பெய்ததால் வீடுகளின் உள்ளே மழைநீா் புகுந்தது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரைஅப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.