11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பரிகம் கிராமத்தில் நடைபெற்று வரும் பாலப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி ஒன்றியம், நல்லாத்தூா் கிராமத்தில் ஏரி தூா்வாரும் பணிகளையும், பரிகம் கிராமத்தில் மாநில சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.7.56 கோடி மதிப்பீட்டில் கோமுகி அணை முதல் வடக்கனந்தல் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் இணைப்பு பாலம் மற்றும் சாலைப் பணிகளை பாா்வையிட்டு, திட்ட மதிப்பீடு, பணிமுடிவடையும் காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து அம்மாபேட்டை கிராமத்தில் கால்நடை மருந்தகத்தை பாா்வையிட்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மாத்தூா் கிராமத்தில் சீமைக் கருவேலமரங்கள் அகற்றும் பணியை பாா்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாத்தூா் கிராமத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.8.06 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நட்டு வைத்துப் பராமரிக்கப்படும் பணி, மாதவச்சேரி கிராமத்தில் ரூ.8.06 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைப்பது ஆகிய பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.