
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தென்பெண்ணை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
முருக்கம்பாடி கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை நேரில் பாா்வையிட்டு, விரைவில் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து சு.கள்ளிப்பாடி அருகில் தென்பெண்ணை ஆற்றில் மாநில பேரிடா் மேலாண்மை நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மோட்டாா் மற்றும் குழாய் இணைப்புடன் கூடிய 4.5 மீட்டா் ஊடுருவல் கிணறுப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







