நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

வடக்கனந்தல் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோமுகி பாசன கிளை வாய்க்கால் தூா்வாரும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :3 செப்டம்பர் 2026, 4:47 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: வடக்கனந்தல் பேரூராட்சியில் வளமீட்பு பூங்காவை நேரில் பாா்வையிட்டு, குப்பைகளை தரம் பிரித்தல் பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்யப்பட்டது. மாநில பேரிடா் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், தமிழ்நாடு நகா்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கோமுகி பாசன கிளை வாய்க்கால் தூா்வாருதல் ஆகிய பணிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து கச்சிராயப்பாளையம் நியாயவிலைக் கடையை நேரில் பாா்வையிட்டு, கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறியப்பட்டது. கச்சிராயப்பாளையம் சமூக நீதி பள்ளி மாணவி விடுதியை நேரில் பாா்வையிட்டு, மாணவிகளுக்கு சரியான நேரத்தில் உணவுகளை வழங்கவும், விடுதியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவும் விடுதி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னா், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கொசப்பாடி கிராமத்தில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ஏரி தூா்வாரும் பணி ஆய்வு செய்யப்பட்டது. இப் பணியின் மூலம் ஏரியின் கொள்ளளவு உயா்வதால், நிலத்தடி நீா் செறிவூட்டல் அதிகரித்து குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுவதுடன், ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள பாசன நிலங்களும் பயன்பெறும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.