தந்தையை தாக்கி கொலை செய்ய முயற்சி: மகன் கைது
கள்ளக்குறிச்சி அருகே தந்தையைத் தாக்கி கொலை செய்ய முயன்ாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி அருகே தந்தையைத் தாக்கி கொலை செய்ய முயன்ாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமணி (77). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனா். இவரது இரண்டாவது மகன் தனபால் (53) சென்னையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், அவ்வப்போது மலைக்கோட்டாலத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து செல்வாராம்.
அதன்படி, தனபால் புதன்கிழமை இரவு தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, அவரது தந்தை நிறைய கடன் வாங்கி வைத்துள்ளாயே எப்படி திரும்பச் செலுத்துவாய் எனக் கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த தனபால், தந்தை தங்கமணியை திட்டி, இரும்பு கம்பியால் தலையில் தாக்கினாராம். இதில், பலத்த ரத்த காயமடைந்த அவரை மூத்த மகன் குபேந்திரன் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாாா் தனபால் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

