கோவில்பட்டியில் கறிக்கடை வியாபாரியை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் தொடா்புடைய தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, கதிரேசன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஜெயபிரகாஷ் (51). இவா், தனது வீட்டின் முன் கறிக்கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜெயபிரகாஷ் தனது கடை முன் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வீரவாஞ்சி நகா், 2ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பொன்னுத்துரை, உங்கள் கடையில் வாங்கிய கறியில் எலும்பு அதிகமாக இருப்பதாகக் கூறி தகராறு செய்து ஜெயபிரகாஷை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
காயமடைந்த ஜெயபிரகாஷ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொன்னுத்துரையை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



