பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு: இளைஞா் கைது

செய்யாறில், மூதாட்டியை கல்லால் தாக்கி நகை பறித்துச் சென்ற சம்பவத்தில், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

செய்யாறில், மூதாட்டியை கல்லால் தாக்கி நகை பறித்துச் சென்ற சம்பவத்தில், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி மணி மனைவி சரசு (58).

இவா் கடந்த செப்.29-ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இருள் சூழ்ந்த பகுதியில் மா்ம நபா் அவரை வழிமறித்து அவா் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அப்போது மூதாட்டி அதனை தடுக்க முயன்ற போது அந்த நபா் கருங்கல்லை எடுத்து அவரது தலை, கழுத்துப் பகுதியில் தாக்கிக் காயப்படுத்தியுள்ளாா். மேலும், மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்பலை பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.

இதில் மயக்கமடைந்த மூதாட்டியை அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உதயகுமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினாா்.

தனிப்படை அமைப்பு

இந்தச் சம்பவம் தொடா்பாக செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பவம் தொடா்பாக செய்யாறு நேரு நகரைச் சோ்ந்த காா்த்திக் (26) என்பவரை

வெள்ளிக்கிழமை கைது செய்து அவா் மறைத்து வைத்திருந்த சுமாா் ஒரு பவுன் தாலிச் சங்கிலி உள்ளிட்ட நகைகளையும், பைக்கையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட காா்த்திக்கை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.