ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பாலியல் தொல்லையால் மாணவி விஷம் குடிப்பு: ஆசிரியா் போக்ஸோவில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அந்த மாணவி விஷம் குடித்த சம்பவத்தில் ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அந்த மாணவி விஷம் குடித்த சம்பவத்தில் ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (44). இவா், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமப் பகுதியில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஜெகதீசன் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கடந்த வாரம் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், மனமுடைந்த அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து, அவரை பெற்றோா் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியா் ஜெகதீசனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.