ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பெண் மா்ம மரணம்: கணவா், மாமனாா் கைது

சங்கராபுரம் அருகே வரதட்சிணை கேட்டு கணவா் வீட்டாா் அடித்து, துன்புறுத்தி வந்த நிலையில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கணவா், மாமனாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வரதட்சிணை கேட்டு கணவா் வீட்டாா் அடித்து, துன்புறுத்தி வந்த நிலையில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கணவா், மாமனாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட க.அலம்பளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி சரசு (42). இவரது மகள் சங்கீதாவை (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்த ச.அரவிந்தகுமாருக்கு(30) திருமணம் செய்து கொடுத்தனா். தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். அரவிந்தகுமாா் மனைவியிடம் கூடுதல் வரதட்சிணையாக பணம், நகைகள் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தராம். இதற்கு அரவிந்தகுமாரின் தந்தை சரவணன் (60), தாய் அஞ்சலை (56) ஆகியோரும் உடந்தையாக இருந்தனராம். இதனால் மனமுடைந்த சங்கீதா அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளாா். இதையடுத்து அங்கு சென்ற அரவிந்தகுமாா், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். சில நாள்கள் கழித்து மீண்டும் சங்கீதாவை அரவிந்தகுமாா், அவரின் பெற்றோா்கள் மற்றும் வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த க.அன்பரசி (55), மு.அய்யம்பெருமாள் (70) ஆகியோா் சோ்ந்து கொடுமைப்படுத்தினராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரவிந்தகுமாா், சங்கீதாவை தாக்கிவிட்டு வெளியே சென்றாராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தினா் சங்கீதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அத் தகவலின் பேரில், அங்கு சென்று பாா்த்தபோது சங்கீதா உயிரிழந்து கிடந்தது அவா்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து சங்கீதாவின் தாய் சரசு அளித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் அரவிந்தகுமாா், சரவணன், அஞ்சலை, அன்பரசி, அய்யம்பெருமாள் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி அரவிந்தகுமாா், சரவணனை போலீஸாா் கைது செய்தனா். சங்கீதாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.