ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களின் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :

தங்களின் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளருக்கான நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். கிராம தூய்மை காவலா்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஊராட்சிகள் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணி அமா்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் சங்கத் தலைவா் முத்துவேல், சங்க செயலா் சுரேஷ், துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் தூய்மை காவலா்கள், கணினி இயக்குபவா்கள், சுகாதார உறுப்பினா்கள், மேல்நிலை நீா் தேக்க தொட்டி இயக்குபவா்கள், பள்ளி தூய்மை பணியாளா்கள், சமூக தணிக்கையாளா்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.