காவிரி பிரச்னையால் காங்கிரஸýக்கு பாதிப்பு'
காவிரிப் பிரச்னை தேர்தலில் காங்கிரஸýக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் (ஐ.பி.சி.பி) புதுவை மாநிலச் செயலர் எஸ்.ஏ. முகமது யூசுப் தெரிவித்தார்.


காவிரிப் பிரச்னை தேர்தலில் காங்கிரஸýக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் (ஐ.பி.சி.பி) புதுவை மாநிலச் செயலர் எஸ்.ஏ. முகமது யூசுப் தெரிவித்தார்.
அந்தக் கட்சியின் நெடுங்காடு கிளை சார்பில், கடைத்தெருவில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெடுங்காடு தொகுதி செயலர் எம்.பூபேஷ்குமார் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முகமது யூசுப் மேலும் பேசியது:
நேரடி மானியத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். காரைக்காலில் வேளாண்மை அழிந்து வருகிறது. எனவே, வேலை உறுதித் திட்ட பணி நாள்களை 200 நாள்களாக உயர்த்த வேண்டும்.
தமிழகம், புதுவைக்குரிய காவிரி தண்ணீரை பெற்றுத் தர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை. இது வரும் தேர்தலில் காங்கிரஸýக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
காரைக்காலில் போதுமான அளவில் மருத்துவ வசதி இல்லை; எனவே, காரைக்காலில் உள்ள பேரவை உறுப்பினர்கள், அரசுக்கு நெருக்கடி தந்து காரைக்காலில் மருத்துவ வசதியை மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலர் எஸ். அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...