: புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில், தமிழை மொழிப்பாடமாக எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் நிறுவனர் பெ.பராங்குசம் வெளிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலையே அந்த அரசு வெளியிடுகிறது. இவர்களைவிட, பிறமொழிப்பாடம் மூலம் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், மாநில அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால் புதுச்சேரி அரசு, தமிழ் அல்லாத பிறமொழிப் பாடம் எடுத்துப் படித்தவர்களையே, முதல் 3 இடங்களில் அறிவிக்கிறது. தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவர்களைப் புறந்தள்ளியிருக்கிறது.
புதுச்சேரி தவிர்த்து, பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியே பிரதானமாக, கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தமிழை மொழிப்பாடமாகத் தேர்வு செய்தோரையே அங்கீகரிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை

எரிவாயு உருளை விலை அதிகரிப்பால் விறகு அடுப்புக்கு மாறி வரும் உணவகங்கள்

‘ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவிய சீனா’! நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
