சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிக்கான கடமையை செய்யத் தவறியது காங்கிரஸ்: அதிமுக புகார்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கான கடமையை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறி விட்டது என அதிமுக துணைத் தலைவர் ஆ.அன்பழகன் கூறியுள்ளார்.

Updated On :

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கான கடமையை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறி விட்டது என அதிமுக துணைத் தலைவர் ஆ.அன்பழகன் கூறியுள்ளார்.

 புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

 அதேபோல் புதுவை சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 2 நாள்களுக்கு முன்பு கடிதம் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநில அரசு இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும்.

 மக்கள் பிரச்னை மற்றும் ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்ட எதிரக்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கடமையைச் செய்ய  தவறிவிட்டனர்.

அக்கட்சியினர் பிளவுபட்டு என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

ஆளும் கட்சி மீது ஏன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளக்க வேண்டும் என ஆ.அன்பழகன்

கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.