
பாகூர் அருகே தரைப்பாலத்தில் விரிசல்: போக்குவரத்து பாதிப்பு
பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், புதுவை - கடலூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், புதுவை - கடலூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாகூரில் இருந்து கடலூருக்குச் செல்லும் வழியில் கொமந்தான்மேடு அருகே செம்மண்டலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இது போக்குவரத்துக்கும், விவசாயத்துக்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது.
இதனால், கொமந்தான்மேடு, பரிக்கல்பட்டு, அரங்கனூர், கெங்கனாங்குப்பம் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படுகை அணையில் நீர் தேங்கியிருந்த நிலையில், மது அருந்த செல்வோர் பாலத்தின் கரைப்பகுதியை உடைத்து விட்டனர். இதனால் நீர் வெளியேறி பாலமும் பலவீனமடைந்து விட்டது.
பின்னர், கரைகள் சீரமைக்கப்பட்டாலும், தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஏற்பட்ட மண் அரிப்பால் பாலத்தின் மையப்பகுதியில் புதன்கிழமை திடீரென இடிந்து உள்வாங்கியது.
இதனால் புதுவை - கடலூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் மீது மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






