பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மனு

கருவடிக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியை, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகானிடம், பொதுமக்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:49 am

தினமணி

கருவடிக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியை, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகானிடம், பொதுமக்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.
 புதுவை கருவடிக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, விளையாட்டு திடலுடன் கூடிய பள்ளியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருவடிக்குப்பம் கிளை சார்பில் பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
 இதையடுத்து பொதுமக்கள் கையெழுத்திட்ட மனு, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் தலைமையில் லாசுப்பேட்டை காலாப்பட்டு தொகுதிச் செயலாளர் வ.சுப்பையா, துணை செயலாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் கருணாஜோதி, துணை கிளைச் செயலாளர் செல்வராசு, கிளை உறுப்பினர்கள் பசுபதி, கனகராஜ், செல்வம், ஆறுமுகம் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.