புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் நுகர்வோர் தின விழிப்புணர்வுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில உணவு விவகாரங்கள் துறை, தமிழ்நாடு - புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு (பெட்காட்), புதுச்சேரி ஸ்ரீசிவசக்தி நுகர்வோர் அமைப்பு ஆகியவை இணைந்து நுகர்வோர் தின விழிப்புணர்வுப் பயிலரங்கை தவளக்குப்பம் ராமதாஸ் நகரில் நடத்தின. புதுச்சேரி ஸ்ரீசிவசக்தி நுகர்வோர் அமைப்பின் தலைவி நாகரத்தினம் வரவேற்றார். பெட்காட் அமைப்பின் புதுச்சேரி மாவட்டச் செயலர் கலியபெருமாள் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து விழிப்புணர்வு பற்றிய கருத்துகளை எடுத்துக் கூறினார். புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் அழகிரி, தமிழ்நாடு - புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராசமோகன், மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உணவு கலப்படத்தைத் தடுப்பது குறித்தும், நுகர்வோர் உரிமைச் சட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
கடலூர் துறைமுக வீட்டு வசதி வாரியக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் முனுசாமி, பெட்காட் மண்டல ஒருங்கிணைப்பாளர் கணேசன், சட்ட ஆலோசகர் முருகன், நுகர்வோர் - சமூக சட்ட விழிப்புணர்வுச் சேவை மையப் பொதுச் செயலர் தமிழ்மணி, பெட்காட் இணைச் செயலர் கலியமுர்த்தி, சித்த மருத்துவர்கள் மோகன்தாஸ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai

5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

