சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மரங்களில் உள்ள  இரும்புக் கூண்டுகள் அகற்றம்

மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மேயாத வகையில் பாதுகாக்க அமைக்கப்பட்ட இரும்புக் கூண்டுகள், மரங்கள் வளர்ந்த நிலையில் அகற்றப்பட்டு வருகின்றன.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:57 am

மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மேயாத வகையில் பாதுகாக்க அமைக்கப்பட்ட இரும்புக் கூண்டுகள், மரங்கள் வளர்ந்த நிலையில் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரங்களுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட இரும்பு வலைகள், கூண்டுகள் ஆகியவற்றை அகற்றும் பணியை புதுவை வனத் துறையுடன் இணைந்து, புதுச்சேரி பன்முக ஒருங்கிணைந்த விழிப்புணர்வு இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாரதி  வீதியில் உள்ள மரங்களில் இருந்த இரும்பு வலைகள், கூண்டுகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. சமூக சேவகர் ஜெனோமாறன், பில்டர்ஸ்  நிர்வாக இயக்குநர் தங்கமணிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இந்தப் பணியைத் தொடக்கி வைத்தனர்.வனத் துறை ஊழியர் சீனிவாசன் தலைமையில், மரங்களில் இருந்த இரும்பு வலைகளை இந்தக் குழுவினர் அகற்றினர். தங்களது பகுதியில் மரங்களில் இரும்பு வலைகள் இருந்தால், அவற்றை அகற்ற 80727 62703 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.