உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

கார்கள் திருட்டு: 4 பேர் கைது

புதுச்சேரியில் கார்களை திருடிச் சென்றதாக கோவையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Published On :

புதுச்சேரியில் கார்களை திருடிச் சென்றதாக கோவையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்து வீதியைச் சேர்ந்தவர் கெüரிசங்கர் (44). வீடுகள் கட்டத் தேவையான ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வரும் இவர், தனது காரை வழக்கம் போல கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
 மறுநாள் காலை பார்த்த போது, காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
 இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் வீரபுத்திரன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையும் அமைக்கப்பட்டது.
 இந்த நிலையில், தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் கெüரி சங்கரின் கார் கடந்து சென்றது தெரிய வந்தது.
 தொடர் விசாரணையில், புதுச்சேரியில் கார் திருடியவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் கோவை சென்று சுந்தராபுரத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (30), வசந்தம் நகரைச் சேர்ந்த பெரோஸ்கான் (28) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 அவர்களை புதுச்சேரி கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்கள் இருவரும் காரை திருடுவதற்காக மற்றொரு காரில் புதுச்சேரி வந்ததும், திருட்டு சாவியைப் பயன்படுத்தி காரை திருடியதும், பின்னர் இருவரும் தனித்தனி கார்களில் கோயம்புத்தூர் சென்றதும் தெரிய வந்தது. பின்னர், மசூத் என்பவரின் உதவியுடன் ஈரோட்டைச் சேர்ந்த நயீமிடம் காரை விற்றதும் தெரிய வந்தது. மேலும், முகமது இப்ராஹிம், அவரது நண்பர் இம்ரானுடன் சேர்ந்து கடந்த 2015-இல் ரெட்டியார்பாளையம், ஜவஹர் நகர் பகுதியில் மேலும் இரண்டு கார்களை திருடியதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, முகமது இப்ராஹிம் அளித்த தகவலின் பேரில், கார் திருட உதவிய மசூத் மற்றும் காரை வாங்கிய நயீம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள இம்ரானை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.