
பிம்ஸ் கல்லூரி கூடுதலாக பெற்ற எம்.பி.பி.எஸ். இடங்களை சென்டாக் மூலம் நிரப்பக் கோரிக்கை
புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி கூடுதலாகப் பெற்ற எம்.பி.பி.எஸ். இடங்களை சென்டாக் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி கூடுதலாகப் பெற்ற எம்.பி.பி.எஸ். இடங்களை சென்டாக் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிம்ஸ் மருத்துவக் கல்லூரி கூடுதலாக 50 எம்.பி.பி.எஸ். இடங்களை கேட்டு வழக்குத் தொடுத்தது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது. ஏற்கெனவே, அந்தக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 38 மருத்துவ இடங்களும், 62 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் என மொத்தம் 100 இடங்களுக்கான சேர்க்கை நடைபெற்றது.
தற்போது, கூடுதலாகப் பெற்ற 50 மருத்துவ இடங்களில் புதுவை அரசு ஒதுக்கீட்டில் இடமாக நிரப்பப்பட வேண்டிய 18 மருத்துவ இடங்களை சென்டாக் நிர்வாகம் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் நேரிடை கலந்தாய்வை ஆக. 31-ஆம் தேதிக்குள் நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல, இந்த பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் 33 மருத்துவ இடங்களையும் சென்டாக் கலந்தாய்வு மூலமே நிரப்ப வேண்டும். இவ்வாறு இந்த 18 அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி புதுவை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற பல மாணவர்களின் லட்சிய கனவான மருத்துவப் படிப்பை வழங்க அதிகாரிகள் உரிய முயற்சி எடுத்து நடத்த வேண்டும்.
மேலும், இவ்வாறு கலந்தாய்வு நடைபெறுவதால் புதிதாக 18 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதே வேளையில், பிற மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களும் வேறு கல்லூரிகளுக்கு இட மாற்றம் செய்து கொள்ள வசதி பெறுவர் எனத் தெரிவித்துள்ளார் பாலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





