தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

பெரியார் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் மரியாதை

புதுச்சேரியில் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:29 am IST

புதுச்சேரியில் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 45-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாநில அரசு சார்பில் முதல்வர் வே. நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தினர் சிவ. வீரமணி தலைமையில் மண்டலத் தலைவர் ராசு, செயலாளர் அறிவழகன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து,  தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
திமுக சார்பில் புதுவை தெற்கு மாநில திமுக அவைத் தலைவர் சீத்தா.வேதநாயகம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ அனிபால் கென்னடி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாநில திமுக சார்பில் பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அதிமுக சார்பில் புதுவை மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 இதே போல, அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 மதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் கபிரியேல் தலைமையில் மாலை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர். 
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, புதிய நீதிக்கட்சி மாநிலத் தலைவர் எஸ். பொன்னுரங்கம் தலைமையிலான நிர்வாகிகளும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ. பாரதி உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.