ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இயற்கை வேளாண் முறைக்கு மாறினால் அதிக வருவாய் கிடைக்கும்: வேளாண் அமைச்சர் பேச்சு

இயற்கை வேளாண் முறைக்கு மாறினால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று வேளாண்துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:41 am

DIN

இயற்கை வேளாண் முறைக்கு மாறினால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று வேளாண்துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
 புதுச்சேரியில் 3 நாள்களாக நடைபெற்ற 32-வது மலர், காய், கனி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. 
நிறைவு விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது: 
 நிதி நெருக்கடி இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு விவசாயத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதற்காகவும்,  புதிய முயற்சிகளை அறியவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது.  
அடுத்த மலர் கண்காட்சி 5 நாள்கள் நடத்த முன்கூட்டியே திட்டமிடப்படும். இம்முறை ரூ. 15 லட்சம் வரை வருவாய் கிடைத்திருக்கும்.  
 விவசாயிகள் வேளாண் சாகுபடியுடன் கோழி வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு,  மீன்வளர்ப்பு உள்ளிட்ட உப தொழில்களிலும் ஈடுபட வேண்டும்.  அப்போது தான் கூடுதல் வருமானம் கிடைக்கும்.  இயற்கை விவசாயத்துக்கு மாறினால் குறைவான செலவில் அதிக வருவாய் ஈட்டலாம். 
 விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று வேளாண் தொழில்நுட்பங்களை விளக்க வேண்டும்  என்றார். 
 கண்காட்சியில் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  லட்சக்கணக்கானோர் கண்காட்சியை பார்த்தனர்.  
 அதேபோல, பல்வேறு காய்கறிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
 இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை காய்கறி ராணியாக பூர்ணாங்குப்பம் செந்தாமரையும் மற்றும் மலர் ராஜாவாக காலாப்பட்டு கண்ணபிரானும் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.  விழாவில்,  தொகுதி எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன்,  வேளாண் இயக்குநர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.