ஆம்புலன்ஸுக்கு வழிவிடக் கோரி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
அவசரகால ஊர்திக்கு (ஆம்புலன்ஸ்) வழிவிடக் கோரி புதுச்சேரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


அவசரகால ஊர்திக்கு (ஆம்புலன்ஸ்) வழிவிடக் கோரி புதுச்சேரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஜாவா கிளப் சார்பில், 16-ஆவது சர்வதேச ஜாவா யெஸ்டி தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் 25 பேர் இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
புதுவை சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தனர்.
கிளப் உறுப்பினர்கள் இதற்கான உறுதிமொழியையும் ஏற்றனர். இது குறித்து கிளப்பின் தலைவர் லியோ பெர்னாண்டஸ் கூறியதாவது:
அவசரகால ஊர்திகளின் அலார சப்தத்தைக் கேட்டவுடன் வாகன ஓட்டிகள் இடதுபுறமாக ஒதுங்கி வழிவிட வேண்டும். சர்வதேச ஜாவா யெஸ்டி தினம் 4-ஆவது ஆண்டாக புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது ஜாவா, ரோட்கிங் 250, ரோட்கிங் 350, யெஸ்டி கிளாசிக் உள்பட பல்வேறு வகை ஜாவா யெஸ்டி இரு சக்கர வாகனங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 19,600 ஜாவா யெஸ்டி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தன. 1996-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், மைசூரில் கடைசி வாகனம் தயாரிக்கப்பட்டது. பின்னர், இந்தியாவில் இந்த வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...