வேளாண் விற்பனைக் குழு ஊழியர்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
புதுவை மாநில வேளாண் விற்பனைக் குழு ஊழியர்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


புதுவை மாநில வேளாண் விற்பனைக் குழு ஊழியர்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மாநில வேளாண் விற்பனைக் குழு ஊழியர்கள் மற்றும் உழவர் சந்தை ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல, 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளிலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அருகே தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமையும் போராட்டத்தை தொடர்ந்த அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.விசுவநாதன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை புதுவை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...