புதுச்சேரி வேளாண் துறையின் நிலத்தடி நீர்ப் பிரிவு சார்பில் சர்வதேச தண்ணீர் தின விழா, தட்டாஞ்சாவடி வேளாண் அலுவலகத்தில் உள்ள விவசாயிகள் பயிற்சிக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி தலைமை வகித்தார். கூடுதல் வேளாண் இயக்குநர் முருகேசன், நிலத்தடி நீர் அதிகார அமைப்பின் உறுப்பினர் செயலர் வெங்கட்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
வேளாண் அதிகாரிகள் பெத்தபெருமாள், ஜீவானந்தம், ரஹ்மான் ஆகியோர் நீர் சிக்கனம், மழைநீர் சேமிப்பு, நீர் மேலாண்மை பற்றி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
வேளாண் அதிகாரி பிரபாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
புவி வெப்பமயமாதல், நீர் சிக்கனம் குறித்த குறும்படங்கள் வெளியிடப்பட்டன. வேளாண் அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.
இதில் என்.எஸ்.எஸ். மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில நிலத்தடி நீர்ப் பிரிவு நீர் நிலவியலாளர் மனோகர் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு

தமிழ் அமைப்புகளின் சாா்பில் கா.சு.பிள்ளை 81ஆவது நினைவேந்தல்

குமரி மாவட்டத்தில் 29,290 தபால் வாக்குகள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

