எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசு மருத்துவமனையில் குழந்தை சாவு

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் பிறந்து 4 நாள்களேயான குழந்தை திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Updated On :14 மே 2018, 11:07 pm

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் பிறந்து 4 நாள்களேயான குழந்தை திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், அர்ச்சனா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. 2 -ஆவது பிரசவத்துக்காக அர்ச்சனாவை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தகுதியான எடையில் இருந்த நிலையில், வேறு சில காரணத்துக்காக குழந்தையை இன்குபேட்டர் பிரிவில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி. சித்ராவிடம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தையின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இறந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.