ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சுண்ணாம்பாறு படகு வீடு சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் இயக்கப்படுமா?

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சொகுசு படகு வீட்டை கையகப்படுத்தி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை

Updated On :14 மே 2018, 11:09 pm

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சொகுசு படகு வீட்டை கையகப்படுத்தி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரிக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆன்மிக சுற்றுலா, இன்பச் சுற்றுலா, கல்வி
ச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என பல்வேறு வகையாக புதுச்சேரிக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மணக்குள விநாயகர் கோயில், ஆரோவில், புதுச்சேரி கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வர்.
இதில் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகம். எனவே, நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சொகுசு படகு வீடு இயக்கும் திட்டத்தை 2016-ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமி தொடக்கிவைத்தார்.
படகு வீடு தயாரிக்கும் நிறுவனமான, மந்த்ரா போட் ஹவுஸ் நிறுவனத்துடன் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம், படகு வீடு அமைக்க சுண்ணாம்பாற்றின் கரையில் இடம் ஒதுக்கி கொடுத்ததுடன், சுற்றுலாப் பயணிகள் தங்கி, படகு வீட்டில் பயணம் செய்ய ஏதுவாக 2400 சதுர அடி நில பரப்பையும் ஒதுக்கி உள்ளது.
இரண்டு தளங்களைக் கொண்ட சொகுசு படகு வீட்டில் உணவருந்தும் பகுதி, சமையல் கூடம், கழிப்பறையுடன் கூடிய குளிரூட்டப்பட்ட மூன்று அறைகள், கருத்தரங்கம், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக இடவசதி, தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர், தொலைக்காட்சி, அழகிய இருக்கைகள் உள்ளன.
இந்தப் படகில் பயணிக்க 24 மணி நேரத்துக்கு ஓர் அறைக்கு இரு நபர்களுக்கு உணவு உள்பட ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் கூடுதலாக ஒரு நபர் தங்கலாம். கூடுதல் நபருக்கு தனியாக ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். சுண்ணாம்பாற்றில் இருந்து புறப்படும் சொகுசு படகு வீடு பாரடைஸ் தீவை அடையும். அங்கு சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சைவ மற்றும் அசைவ உணவுகள் படகிலேயே சமைத்து பரிமாறப்படும்.
உணவுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் படகில் ஓய்வு எடுக்கலாம் அல்லது பாரடைஸ் தீவில் பொழுதைக் கழிக்கலாம். பிற்பகல் 3 மணிக்கு படகு மீண்டும் புறப்பட்டு சுண்ணாம்பாற்றில் நீண்ட தொலைவு பயணிக்கும். அப்போது, சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம். மாலை 6 மணிக்கு படகு நங்கூரம் பாய்ச்சப்பட்டு, ஆற்றின் நடுவில் நிறுத்தப்படும்.
பயணிகள் படகு வீட்டிலேயே இரவு பொழுதை இனிமையாக கழித்து, மறுநாள் காலை 6 மணி அளவில் சூரிய உதயத்தைக் காணலாம். காலை சிற்றுண்டி படகில் பரிமாறப்படும். அதன் பின்னர் படகு பயணம் தொடங்கிய இடத்துக்கு வந்துசேரும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், படகு வீட்டில் தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு உடைகள், உயிர் காக்கும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படகு இப்போது நல்ல முறையில் இயங்கி வருகிறது. ஆனால், சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் பணம் எதுவும் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக கேட்டரிங் ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலர் என்.விஜயராகவன் கூறியதாவது:
சொகுசு படகு வீடு திட்டம் தொடங்கும்போது மந்த்ரா நிறுவனத்துக்கு சுற்றுலாத் துறை ரூ.50 லட்சம் மானிய நிதி கொடுத்தது. இந்தப் படகு வீட்டின் மூலம் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு மாதம் ரூ.20 ஆயிரமும், படகு வீட்டின் அறைகள் மாதம் முழுவதும் முழுமையாக நிறைவு பெற்றால் ரூ.45 ஆயிரமும் கிடைக்கும் என்றும் அரசு அறிவித்தது.
ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அந்த நிறுவனம் பணம் எதுவும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு செலுத்தவில்லை. மேலும், இப்போது குடிநீர், மின்சாரக் கட்டணமாக ரூ.6 லட்சம் இந்த நிறுவனம் பாக்கிவைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகளை துண்டித்தனர். இதையடுத்து, ரூ.1 லட்சத்தை மட்டும் செலுத்தி விட்டு மீதமுள்ள பணத்தை செலுத்துவதற்கு காலஅவகாசம் கேட்டுள்ளனர்.
இந்தப் படகு வீட்டின் மூலம் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருவாய் வரும் நிலையில், இதில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய லாபத்தில் உரிய பங்குத் தொகையை இதுவரை செலுத்தவில்லை. அரசு அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இங்கு அனுமதியின்றி மது விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் படகு வீட்டை சுற்றுலாத் துறையே கையகப்படுத்தி நடத்தினால் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.15 லட்சத்துக்கும் மேல் வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.