புதுவையில் நகராட்சி, கொம்யூன் கடைகளுக்கான உயர்த்தப்பட்ட வரிகளை மீண்டும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் வசூலிக்கப்படும் தொழில் வரி, சொத்துவரி உள்ளிட்டவை கடுமையாக உயர்த்தப்பட்டன.
மேலும் புதிதாக குப்பை வரி கொண்டுவரப்பட்டதுடன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான கட்டடங்களுக்கான வாடகைகளும் 800 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரி வணிக உரிமை கூட்டமைப்பு சார்பில், பிப்ரவரி 20-ஆம் தேதி ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் வரி உயர்வுகளை நிறுத்திவைப்பதாகவும், குழு அமைத்து ஆலோசித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஆனால், இரண்டு மாதங்களாக எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை.
இதையடுத்து தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. ஏப்.24-ஆம் தேதி உள்ளாட்சித் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது, அமைச்சர் நமச்சிவாயம் விரைவில் அதிகாரிகளை அழைத்துப் பேசி குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்படி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளாட்சித் துறை இயக்குநர் மலர்கண்ணனை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் நமச்சிவாயம் உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்படும் நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் உயர்த்தியுள்ள சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம வரி, அவைகளுக்கு சொந்தமான கட்டடங்களுக்கான வாடகை உயர்வு மிகவும் அதிகம் என கூட்டணி கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளிடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் எதிர்ப்பு அதிகம் வந்துள்ளது. எனவே குழு அமைத்து, எதிர்ப்பு அதிகம் இல்லாத வகையில் வரி மற்றும் வாடகையை திருத்தி விரைவில் அறிவிக்கும்படி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

