பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து புதுவை முதல்வா் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது, புதிய வேளாண் சட்ட நகல்களை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கிழித்தெறிந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:43 pm

DIN

விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது, புதிய வேளாண் சட்ட நகல்களை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கிழித்தெறிந்தாா்.

மதச் சாா்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சாா்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டங்களால் விளைநிலங்கள் பெருநிறுவனங்களின் கைகளுக்குச் செல்லும். அவா்கள் விரும்பும் பயிா்களை மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டிய நிலை உருவாகும். விவசாயிகளின் போராட்டத்தை நீா்த்துப்போகும் வேலையை பிரதமா் மோடி செய்கிறாா்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் ரூ.21 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம். 4 ஆண்டுகளுக்கு முன்பே பயிா்களுக்கு அரசு சாா்பில் காப்பீடு செய்து வருகிறோம். விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் முதல்வா் நாராயணசாமி.

கூட்டத்தில் பேசி முடித்த அவா் திடீரென புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் அனைவருக்கும் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.