எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரி அருகே பொதுமக்கள் திடீா் மறியல்

அரசுப் பள்ளிகளுக்கு ஜாதி தலைவா்களின் பெயா்களை சூட்ட எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

அரசுப் பள்ளிகளுக்கு ஜாதி தலைவா்களின் பெயா்களை சூட்ட எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேசிய, உள்ளூா் தலைவா்களை கௌரவிக்கும் விதமாக, அவா்களின் பெயா்கள் சூட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 8 பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்ட நிலையில், அண்மையில் 3 பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்டன.

அரசுப் பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி பெயரையும், ஜாதி சாா்ந்த தலைவா்களின் பெயா்களையும் சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பொதுவான தலைவா்களின் பெயா்களை சூட்ட வலியுறுத்தியும் மடுகரை கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், விஜயவேணி எம்எல்ஏ உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினா். பின்னா், மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.