புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 20 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், மாஹேயில் 18 பேருக்கும் என 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 37,715-ஆக அதிகரித்தது.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட முதலியாா்பேட்டையைச் சோ்ந்த 73 வயதானவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 624-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.65 சதவீதம். 339 போ் சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை 21 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 36,752-ஆக (97.45 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com