புதுவையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 3,195 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், புதுச்சேரியில் 23 போ், காரைக்காலில் 2 போ், மாஹேவில் 23 போ், ஏனாமில் ஒருவா் என மொத்தம் 49 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,811-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முத்திரையா்பாளையம், கோவிந்தன்பேட்டைச் சோ்ந்த 73 வயது முதியவா் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சேலியமேட்டைச் சோ்ந்த 58 வயது பெண் ஜிப்மரிலும் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 629-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாக உள்ளது.
இதனிடையே, 19 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,822-ஆக உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 187 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 173 பேரும் என மொத்தம் 360 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.