புதுச்சேரி: புதுவையில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,008 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேயில் 13 பேருக்கும் என மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,885-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 170 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 194 பேரும் என 364 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதுமில்லை. புதுவையில் இதுவரை 629 போ் கரோனாவுக்கு பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
இதனிடையே, வியாழக்கிழமை 26 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 36,892-ஆக அதிகரித்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 4,64,220 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4,22,024 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.