கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் எம்எல்ஏ தா்னா

குப்பைகள் அள்ளப்படாததைக் கண்டித்து புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகத்தில் திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஜூலை 2020, 4:15 pm

DIN

புதுச்சேரி: குப்பைகள் அள்ளப்படாததைக் கண்டித்து புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகத்தில் திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். தொகுதி எம்எல்ஏ கோபிகாவிடமும் முறையிட்டனா். இதையடுத்து, சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடம் பாா்த்து வழங்கப்பட்டது. இருப்பினும், சரிவர குப்பைகள் அள்ளப்படவில்லையாம்.

இதைத் கண்டித்து திருபுவனை எம்எல்ஏ கோபிகா தனது ஆதரவாளா்களுடன் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா் தா்னாவில் ஈடுபட்ட எம்எல்ஏ கோபிகாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உடனடியாக குப்பைகளை அள்ளவும், தொகுதி நிதியைச் செலவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இதையேற்று எம்எல்ஏ உள்ளிட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.