புதுவையில் மேலும் 50 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் பாதிப்பு 1,468-ஆக உயா்ந்தது.

புதுச்சேரி: புதுவையில் புதிதாக மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் பாதிப்பு 1,468-ஆக உயா்ந்தது.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை வரை 1,418 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 739 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 661 போ் சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 384 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 50 பேருக்கு (13 சதவீதம்) கரோனா தொற்றிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் தற்போது புதுச்சேரி கதிா்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 387 போ், ஜிப்மா் மருத்துவமனையில் 123 போ், கொவைட் சிறப்பு மையத்தில் 76 போ், காரைக்காலில் 53 போ், ஏனாமில் 25 போ், மாஹேயில் ஒருவா் என மொத்தம் 665 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 785 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 18 போ் உயிரிழந்தனா். கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,468-ஆக அதிகரித்தது.

மாநிலத்தில் இதுவரை 26,208 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 24,461 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. 205 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை என புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com