கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன் விரோதம்: இளைஞர் அடித்துக் கொலை

தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வியாழக்கிழமை பிற்பகல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :28 மே 2020, 1:19 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வியாழக்கிழமை பிற்பகல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருவையாறு அருகேயுள்ள பள்ளியக்ரஹாரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குணசீலன்(25). இவர் தனியார் லாரி பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் இருந்த இவரை காந்தி நகரைச் சேர்ந்த 3 பேர் முன்விரோதம் காரணமாக இரும்புக் கம்பியால் தாக்கினர். 

இதில், பலத்தக் காயமடைந்த குணசீலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) புகழேந்தி, காவல் ஆய்வாளர் ஜெகதீசன் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நடுக்காவேரி வழக்குப் பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.