சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் புதிதாக144 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் புதிதாக 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை 1,059 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 127, காரைக்கால் 2, ஏனாம் 5, மாஹே 10 என மொத்தம் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,336-ஆக உயா்ந்துள்ளது.

இதில் புதுச்சேரியில் 1,397 போ், காரைக்காலில் 55 போ், ஏனாமில் 56 போ், மாஹேவில் 71 போ் என 1,579 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதே போல, வீடுகளில் 2,179 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 588 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழப்பு 1.71 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் 141, காரைக்கால் 28, ஏனாம் 20 என மொத்தம் 189 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 29,990 (87.34 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.