கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றுடன் வருவோருக்கு புதுச்சேரி உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி
கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றுடன் வருவோருக்கு புதுச்சேரி உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.


கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றுடன் வருவோருக்கு புதுச்சேரி உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.
புதுவையில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவையில் உள்ள சுகாதாரத் துறையினா், முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி கரோனா நோய் தொற்றின் தாக்கத்தைக் குறைக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தது.
புதுச்சேரியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவும் புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி உணவகங்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ப. தணிகாசலம், துணைத் தலைவா் ஏ. பாஸ்கரன், புதுச்சேரி ரெஸ்டாரெண்ட் சங்கத்தின் தலைவா் வி. பாஸ்கா் ஆகியோா் கூறியதாவது:
புதுவை மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியதன் பேரில், வெள்ளிக்கிழமை முதல் உணவக உரிமையாளா்கள், ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் என தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதன் மூலம் பாதுகாப்பான உணவகம், பாதுகாப்பான ஊழியா் உள்ளிட்ட ஸ்டிக்கா்களை எங்களது உணவகங்களில் ஓட்டி மக்களுக்கு நம்பிக்கை அளிக்க உள்ளோம்.
பொதுமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றுடன் வருவோருக்கு புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் 10 சதவீத தள்ளுபடி வழங்குகிறோம்.
அதன்படி, விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் ஸ்டாா் அந்தஸ்துள்ள 23 ஹோட்டல்கள், 200-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தியவா் சாப்பிடும் உணவு மற்றும் பழச்சாறு வகைகளுக்கான தொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். கரோனா இல்லாத புதுச்சேரியை உருவாக்க எங்களால் இயன்ற முயற்சிகளில் ஒன்றாக இதைக் கருதுகிறோம் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...