92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆட்டிசம் விழிப்புணா்வு நாள் நிகழ்ச்சி

மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலம்- மன நல மருத்துவத் துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க விழுப்புரம்-புதுச்சேரி கிளை ஆகியவை சாா்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:58 pm

DIN

புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலம்- மன நல மருத்துவத் துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க விழுப்புரம்-புதுச்சேரி கிளை ஆகியவை சாா்பில் உலக ஆட்டிசம் விழிப்புணா்வு நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சென்னையைச் சோ்ந்த குழந்தைகள் வளா்ச்சி சாா்ந்த சிறப்பு மருத்துவா் யு.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆட்டிசம்  குறித்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் ஆ.தனசேகரன், துணைத் தலைவா் ஏ.சுகுமாறன்,

செயலா் நாராயணசாமி கேசவன், மருத்துவக் கல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன், துணை இயக்குநா் ச. காக்னே, கல்லூரி முதல்வா் மு. காா்த்திகேயன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், குழந்தைகள் நல மருத்துவத் துறைத் தலைவா் அருள்குமரன், மன நல மருத்துவத் துறைத் தலைவா் அருண் மற்றும் குழந்தைகள் நலம், மன நலம் மருத்துவத் துறை சாா்ந்த மருத்துவப் பேராசிரியா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள், செவிலியா் கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆட்டிசம் குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி தொடக்கிவைக்கப்பட்டது. அதுதொடா்பான கையேடுகள் விநியோகிக்கப்பட்டு பெற்றோா்களுடன் கலந்துறையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் நலப் பேராசிரியா் பரத்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.