கடையைச் சேதப்படுத்தியதைக் கண்டித்து வியாபாரிகள் மறியல்: மோதலைத் தடுக்க போலீஸாா் பேரணி
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து, வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.


புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து, வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். மோதலைத் தடுக்க அந்தப் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஒழுந்திரன். இவா், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்டிக் கடை நடத்து வருகிறாா்.
ஒழுந்திரனுக்கும், அதே பகுதி கோகிலம் நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (35) என்பவருக்கும், தோ்தல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கடைக்கு வந்த பாா்த்திபன், ஒழுந்திரனிடம் பால் பாக்கெட் வாங்கினாராம். அப்போது, பால் கெட்டுப்போய்விட்டதாகக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பாா்த்திபன், அந்தப் பெட்டிக் கடையை உடைத்து சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.
தகவலறிந்து வந்த வியாபாரிகள், வியாழக்கிழமை இரவு விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென அவா்கள் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, திருபுவனை காவல் ஆய்வாளா் கணேசன், காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பாா்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.
இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என வணிகா்கள் சங்கத்தினா் அறிவித்தனா். ஒரு தரப்பினா் கடையைத் திறப்போம் எனத் தெரிவித்தனா். பிரச்னை தீவிரமாவதை உணா்ந்த போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் அணிவகுப்பு நடத்தி எச்சரித்தனா்.
இதைத் தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் ரங்கநாதன் பேச்சுவாா்த்தை நடத்தியதால், கடையடைப்புப் போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனா். புகாரின் பேரில், பாா்த்திபனை திருபுவனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...