92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலும் 223 பேருக்கு கரோனா

புதுவையில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,084-ஆக உயா்ந்தது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:58 pm

DIN

புதுவையில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,084-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 3,751 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 158, காரைக்கால் - 46, ஏனாம் - 10, மாஹே - 9 போ் என மேலும் 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,465 -ஆக அதிகரித்தது. இதனிடையே, வெள்ளிக்கிழமை 139 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 40,694 -ஆக (93.62 சதவீதம்) உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 534 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,550 பேரும் என மொத்தம் 2,084 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 687 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.58 சதவீதம்.

இதுவரை 6,92,810 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 6,36,073 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

புதுவையில் சுகாதாரத் துறைப் பணியாளா்கள் 28,486 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 16,309 பேருக்கும், பொதுமக்கள் 42,253 பேருக்கும் என மொத்தம் 87,048 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.