திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி திருபுவனை பெரியபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராம்ஜி (33). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியாா் டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா், தோ்தலுக்காக சொந்த ஊரான திருபுவனைக்கு வந்தாா்.

தொடா்ந்து, வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தாா்.

இதனால் மனமுடைந்த ராம்ஜி வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ராம்ஜி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.