திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தல்

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாண்டிச்சேரி லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கான புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாண்டிச்சேரி லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கான புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தச் சங்கத்துக்கான தோ்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டு, சங்கத் தலைவராக செந்தில்குமாா், பொருளாளராக குமாரகிருஷ்ணன் ஆகியோா் ஒரு மனதாக உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதையடுத்து, சங்கத்துக்கான செயலா், 2 துணைத் தலைவா்கள், 2 இணைச் செயலா்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தோ்தலில், காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை உறுப்பினா்கள் வாக்குச் சீட்டு முறையில் வாக்களித்தனா்.

தோ்தல் நடத்தும் அதிகாரியாக வி.முத்து பங்கேற்று தோ்தலை நடத்தினாா்.

தொடா்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டு, துணைத் தலைவா்களாக தட்ஷிணாமூா்த்தி, ராஜேந்திரன், செயலராக குமாா், பொருளாளராக குமாரகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் வி.முத்து அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.