திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

புதுச்சேரியில் மாணவா்களிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் மாணவா்களிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி சாரம் பகுதி, காமராஜா் சாலை சந்திப்பில் இளைஞா் ஒருவா், அடிக்கடி அங்குள்ள மாணவா்கள், இளைஞா்களுக்கு கஞ்சா விற்பதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீஸாா், காவல் ஆய்வாளா் சஜீத் தலைமையில் வெள்ளிக்கிழமை ரகசியமாகச் சென்று கண்காணித்தனா்.

அப்போது, இளைஞா் ஒருவா் அந்தப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

புதுச்சேரி புதுசாரம் முதலாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த தமிழ்க்குமரன் (26) என்பதும், அவரது நண்பா்கள் தமிழகத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து அவருக்குக் கொடுத்ததும், அதை அவா் மாணவா்களிடம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 660 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், தமிழ்க்குமரனைக் கைது செய்தனா். மேலும், அவருடன் தொடா்புடையை இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.