புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 715 பேருக்கு கரோனாமேலும் 3 போ் பலி
புதுவை மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில், புதிய உச்சமாக ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 3 போ் பலியாகினா்.


புதுவை மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில், புதிய உச்சமாக ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 3 போ் பலியாகினா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 4,748 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 567 பேருக்கும், காரைக்காலில் 88 பேருக்கும், ஏனாமில் 35 பேருக்கும், மாஹேயில் 25 பேருக்கும் என மேலும் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி அதிகபட்சமாக 688 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமான பதிவாக இருந்தது. தற்போது அதைத் தாண்டி கரோனா தொற்று அதிகரித்தது.
மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் 47,108 பாதிக்கப்பட்டனா். தற்போது மருத்துவமனைகளில் 721 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,369 பேரும் என மொத்தமாக 4, 090 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 2 போ், காரைக்காலைச் சோ்ந்த ஒருவா் என மேலும் 3 போ் உயிரிழந்தனா். தொடா்ச்சியாக உயிரிழப்பு அதிகரித்து வருவதால், கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 705- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.50 சதவீதம்.
42,313 போ் குணம்: அதேநேரம், இந்த நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று 42,313 போ் மீண்டனா். குணமடைந்தோா் விகிதம் 89.82 சதவீதம். இதுவரை 7,24,132 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா தடுப்பூசி தீவிரம்: புதுவை மாநிலத்தில் இதுவரை 29,952 சுகாதாரப் பணியாளா்கள், 17,672 முன்களப் பணியாளா்கள், 1,00,664 (45 வயதுக்கு மேற்பட்டோா்) பொதுமக்கள் என 1,48,288 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களில் 4,159 போ் பாதிப்பு: தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் 4,159 போ் இந்தத் தொற்றுக்கு ஆளாகினா். 18 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...