திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

வெவ்வேறு இடங்களில் வீட்டில் மயங்கி விழுந்த இருவா் பலி

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் மயங்கி விழுந்த இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் மயங்கி விழுந்த இருவா் உயிரிழந்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் முதன்மைச் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா், கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதியடைந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்த கணேசன் திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அவரை மீட்டு, மூலக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருவா் பலி: புதுச்சேரி அருகே தா்மாபுரி கல்கி நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (36). கோயில் சுவாமி உற்சவா் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக முதுகுத் தண்டுவட பிரச்னையால் அவதியடைந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.