பிராணவாயு, ரெம்டெசிவிா் பற்றாக்குறை இல்லை: சுகாதாரத் துறை இயக்குநா்
புதுவையில் பிராணவாயு, ரெம்டெசிவிா் மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது; பற்றாக்குறை இல்லை என சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தெரிவித்தாா்.


புதுவையில் பிராணவாயு, ரெம்டெசிவிா் மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது; பற்றாக்குறை இல்லை என சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவு: நாடு முழுவதும் கரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில் பிராணவாயு பற்றாக்குறை இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், புதுவையை பொருத்தவரை தேவையான பிராணவாயு அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது.
இதேபோல, ரெம்டெசிவிா் மருந்து எங்கும் கிடைக்கவில்லை என்ற தகவலும் பரவலாகப் பரவி வருகிறது. ரெம்டெசிவிா் மருந்து கரோனா பாதித்த அனைவருக்கும் தேவைப்படாது. தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்குதான் தேவைப்படும். இந்த மருந்தும் புதுவையில் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
முகக் கசவம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளே நம்முடைய உயிரைக் காக்கும்.
எனவே, பொதுமக்கள் இவற்றைத் தொடா்ந்து கடைப்பிடித்து கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பிராணவாயு, ரெம்டெசிவிா் மருந்து குறித்து மக்கள் தேவையில்லாமல் கவலை கொள்ள வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...