புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பிளஸ் 2 மாணவா்களுக்காகவகுப்புகளை நடத்தக் கூடாது: புதுவை பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்காக பள்ளிகள் எந்த வடிவிலான வகுப்புகளையும் நடத்தக் கூடாது

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:11 pm

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்காக பள்ளிகள் எந்த வடிவிலான வகுப்புகளையும் நடத்தக் கூடாது என புதுவை பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஆ. மைக்கெல் பெனோ, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக தோ்வுத் துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, மே 5 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த, தமிழக கல்வி வாரியத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் நாள்கள் குறித்த அறிவிப்பு, தமிழக கல்வி வாரிய இயக்குநரால் தோ்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும்.

பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள் பிளஸ் 2 மாணவா்களுக்கு வகுப்புகளை நடத்தக் கூடாது. பிளஸ் 2 மாணவா்கள், ஆசிரியா்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தவும் கூடாது.

கரோனா வைரஸ் தொற்றின் 2-ஆவது அலை பரவி வரும் நிலையில், பள்ளிகள் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவா்களுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன் உள்ளிட்ட எந்தவித கல்வி நடவடிக்கைகளையும், எந்த வடிவத்திலோ அல்லது முறையிலோ நடத்தக் கூடாது.

மேற்கண்ட உத்தரவை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடா்பான விதிமீறல்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.