புதுச்சேரி மத்திய சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு கரோனா
புதுச்சேரி மத்திய சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுச்சேரி மத்திய சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பால் பரோல் பாா்வையாளா்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறையில் முகக்கவசத்துடன், தனிமனித இடைவெளியுடன் இருக்க கைதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிறையில் அண்மையில் துணை கண்காணிப்பாளா், 2 வாா்டா்கள், 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தனியாா் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், சிறையில் மீதமுள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மேலும் 12 சிறை கைதிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவா்கள் அனைவரையும் சிறைத் துறை அதிகாரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனா். இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளுடன் தொடா்பில் இருந்த கைதிகளுக்கு ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சுகாதாரத் துறையை அணுகியுள்ளோம். சிறைக் கைதிகள் யாரும் தனியாா் மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. முன்னெச்சரிக்கையாகவே மருத்துவமனைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...